web log free
July 02, 2025

‘கோத்தா வெற்றிப்பெற்றால் என்னைக் கொல்வார்’


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீ லங்கா​ பொதுஜன  பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிப்பெற்றால், தன்னைகொன்று விடுவார். என ஐக்கிய தேசியக் கட்சியின்பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரதெரிவித்தார்.


தன்னை கொன்றுவிட்டால் தன்னுடைய இரண்டுகுழந்தைகளும் அநாதைகளாகி விடுவர் என்றும் ஹிருணிகா தெரிவித்தார்.


தனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பயம், இந்நாட்டில் வாழ்கின்ற சகல தாய்மார்களின் மனதிலும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்

கலந்துகொண்டு கருத்துரைத்த போதே  மேற்கண்டவாறு ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

Last modified on Saturday, 26 October 2019 03:28
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd