சட்டவிரோதமான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து பேரணி நடத்தினர், தேர்தல் சட்டத்திட்டங்களை மீறினர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த 53 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இவர்கள், இன்று (25) ஆஜர்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 10ஆவது சந்தேகநபரான விஷ்வ தனஞ்ஜய சில்வா மட்டும் எதிர்வரும் 8ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
10 ஆவது சந்தேகநபர், இவ்வாறான குற்றச்சாட்டின் கீழ் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதனையடுத்தே, அவருக்கு பிணை வழங்கப்படவில்லை.