தனது கடமைகளுக்கும் இடையூறு விளைவித்த நபரை, தன்னாலும் தன்னுடைய பாதுகாப்பு அதிகாரிகளினாலும் கட்டுப்படுத்தமுடியவில்லை. அவர், தன்னை அரிவாளினால் கொத்துவதற்கே வந்தார் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்தார்.
கஞ்சா விற்பனைச் செய்யும் அந்த நபர், யாருக்கும் கட்டுப்படாதவர், அவர், சுதந்திரக்கட்சி, ஐ.தே.க., ஜே.வி.பி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய அமைப்புகளுக்கு சார்பானவர் அல்லர். அந்த பிரதேசத்தில் சண்டியரை போலவே செயற்படுகின்றார் என்றும் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
பாராளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பிய சுசந்த புஞ்சிநிலமே,
தமிழ், முஸ்லிம் மக்களுடன் வாழும் தனக்கு அவ்வாறான பிரச்சினை இல்லை. ஆனால், சிங்கள மக்கள் சிறுபான்மையினமாக வாழும், திருகோணமலையிலுள்ள அந்த பகுதியிலேயே தனக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
எனக்கு ஒதுக்கப்படும் நிதியை மக்களுக்காக பயன்படுத்தும் உரிமை உள்ளது. அவ்வாறு செல்கையில், தனக்கும், தன்னுடைய மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், தன்னுடைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படும் வகையிலான எவ்வாறானதொரு சம்பவமும் இனிமேல் இடம்பெறுமாயின், தனக்கு வழங்கியிருக்கும் உத்தியோகபூர்வ துப்பாக்கியை, ஆகக் குறைந்த அதிகாரத்தில் பயன்படுத்துவேன் என்றார்.