இலங்கை பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில், அரை நிர்வாணத்துடன் கூடி பெண்ணொருவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டமை இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தை ஏற்றியது யார் அல்லது சைபர் பிரச்சினையா? என்பது தொடர்பிலான கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் பாராளுமுன்ற ஊடகப் பணிப்பாளரிடம் வினவியபோது, அந்தப் படத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், பாராளுமன்ற டுவிட்டர் கணக்கை முடக்குவதற்கு எவ்விதமான நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை என்றார்.
சுமார் 25 நிமிடங்கள் மட்டுமே அந்தப் படம் இருந்துள்ளது. அதற்குள் அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த 25ஆம் திகதி இரவு வேளையிலேயே இந்த நிர்வாணப் புகைப்படத்தை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பார்வையிடமுடிந்தது.