முஸ்லிம் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் மொஹமட் மிப்லால் மௌலவியிடம் பொலிஸார், சுமார் 4 மணிநேரத்துக்கு மேல் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின், தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசிம் தொடர்பில், 2015 ஆம் ஆண்டு நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில், பொலிஸ் தலைமையகத்தில் செய்யப்பட்டிருந்த முறைபாடு தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடு கடந்த 18 ஆம் திகதி செய்யப்பட்டது. விசாரணைகள் கடந்த 25 ஆம் திகதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையிலும் முன்னெடுக்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.