web log free
May 25, 2026

சகல சங்க சபைகளும் கோரிக்கை


நீதிமன்றத்தை அவமதித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வண.ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு சகல சங்க சபைகளும் கோரியுள்ளன.

பொது மன்னிப்பு வழங்கப்படுவது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதங்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அஸ்கிரிய மகா நிக்காய, மல்வத்து மகா நிக்காய, கோட்டே மகா நிக்காய, அமரபுர மகா நிக்காய ஆகிய சங்க சபைகளின் மகாநாயக்க தேரர்களே இவ்வாறு கோரிக்கை கடிதங்களை அனுப்பிவைத்துள்ளனர்.

இதேவேளை, ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் திலங்க தெல பண்டாரவும் கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd