பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கவுள்ளார் என தகவல்கள் வெ ளியாகியிருந்தன.
தென் மாகாணத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரே இவ்வாறு இணைந்துகொள்ளவுள்ளார் என அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
கடந்த இரண்டு வாரகாலமாக இந்த கதை சமூக வலைத்தளங்களில் உலாவருகின்றன.
இந்நிலையில், ரணிலின் வலது கையாக செயற்படும் அமைச்சர்களில் ஒருவர், கோத்தாவுக்கு ஆதரவளிக்கவுள்ளார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ உறுதிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய மஹிந்த, “ரணிலின் வலது கை, இன்னும் இரண்டொரு நாட்களில் கோத்தாவுக்கு ஆதரவளிப்பார்” என்றார்