web log free
February 03, 2026

“கோத்தாவை கொல்வோம்”- பௌசியிடம் விசாரணை

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் உரை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பில், கொழும்பு-14 கிராண்பாஸ் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விசாரணை தொடர்பிலான அறிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், கிராண்பாஸ் பொலிஸார் சமர்ப்பித்தனர். 

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின், தொட்டலங்க பிரதேசத்தில் பிரச்சார காரியாலயத்தை கடந்த 24 ஆம் திகதி திறந்துவைக்கும் உற்சவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, “கோட்டாவை கொல்வோம்” என தெரிவித்தார் என சிங்கள ராவய அமைப்பினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd