அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, கட்சியின் உறுப்புரிமையிலிருந்து பிரதியமைச்சர் வசந்த சேனாநாயக்கவை உடனடியாக தூக்கிவிட்டது.
அடுத்ததாக, அவருடைய வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க வேண்டுமாயின் நான்கு கேள்விக்கு பதிலளிக்கவேண்டும் என கேட்டிருந்தார்.
அதில்,
1. அடுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவா?
2. அடுத்த அமைச்சரவையில் ரவி கருணாநாயக்கவுக்கு பதவி வழங்கப்படுமா?
3. ரிஷாட் பதியூதீன் பிரசாரத்தில் ஈடுபடுவரா?
4. சஜித்தின் மேடையில் ஹ்க்கீம் ஏறுவாரா? எனக் கேட்டிருந்தார்.
இதேவேளை, பிரதியமைச்சர் வசந்த சேனாநாயக்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு மறைமுகமாக ஆதரவு நல்கினார் என்றக் குற்றச்சாட்டும் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே கட்சியின் உறுப்புரிமை பதவியிலிருந்து அவர், அதிரடியாக இன்றிரவு தூக்கப்பட்டார்.