web log free
April 05, 2026

இலங்கையில் 3 சிறுவர்கள் சடலங்களாக மீட்பு

இலங்கையில் மூன்று சிறுவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, மலையகத்திலேயே இவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சடலங்கள் தொடர்பில் அந்தந்த பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் கிணற்றுக்குள்ளிருந்து 4 வயதான சிறுவனும், 2 வயதான சிறுமியும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அவருடைய தாய், ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நானுஓயாவில் இன்றைக்கு 14 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த 14 வயதான சிறுவன், கொத்மலை ஓயாவிலிருந்து சடலமாக நேற்று (29) மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில், அக்குழந்தைகள் இரண்டையும் கிணற்றுக்குள் வீசியெறிந்த தாய், தானும் தற்கொலை செய்து கொள்வதற்கு முயன்றுள்ளார் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd