web log free
November 28, 2024

சஹ்ரானின் வீட்டுக்குள் 50 அடி குழி- சி.ஐ.டி விசாரணை

 
ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியவரும் தௌஹீத் ஜமாஆத் அமைப்பின் தலைவருமான சஹ்ரான் வீட்டில் சுமார் 50 அடி ஆழத்துக்கு குழியொன்று தோண்டப்பட்டுள்ளது.
 
வனாத்தவில்லு, லெக்டோவத்த வீட்டிலேயே இனந்தெரியாத நபர்கள், மிகவும் இரகசியமாக குழி தோண்டியிருப்பது தொடர்பில் குற்றப்புலாய்வுப் பிரிவு, பரந்தளவிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
 
அந்த வீட்டின் கொங்கிறீட் தட்டை உடைத்துவிட்டே, ஆழமான குழியை தோண்டியுள்ளனர்.
 
வனாத்துவில்லு லெக்டோ தோட்டத்திலிருந்து பெருந்தொகையான வெடிப்பொருட்கள், கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவினாரால் மீட்கப்பட்டது.
 
அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அந்த சந்தேகநபர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
 
இங்கிருந்தும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டிருக்கலாம் என சி.ஐ.டியினர் சந்தேகம் தெரிவித்னர். இந்நிலையில், இந்த வீட்டில் குழி தோண்டப்பட்டமை தொடர்பில் சி.ஐ.டியின் விசேட பிரிவு, முழுமையான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
 
 
 
Last modified on Sunday, 03 November 2019 03:12
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd