web log free
March 23, 2026

சீனப் பெண்ணை “ரத்தரன்” வன்புணர்ந்தார்

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சீனப் பெண்ணை “ரத்தரன் “ என்றழைக்கப்படும் கிருஷ்சாந்த புஷ்பகுமார வன்புணர்ந்துள்ளார். 

அவர், தென் மாகாண சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஆவார்.

அவர், தன்னுடைய சாரதி உள்ளிட்ட குழுவினருடன் இணைந்தே, சுற்றுலா வந்திருந்த சீனப்பெண்ணை, கூட்டாக வன்புணர்ந்துள்ளனர்.

இதுதொடர்பில், காலி பொலிஸ் நிலையத்தில் 2019 மார்ச் 31ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும்,  ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்னும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என அப்பெண், வீடியோ காட்சியொன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். 

தன்னை கூட்டாக வன்புணர்ந்தமை தொடர்பில், “பீ“ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், எவ்விதமான சட்ட நடவடிக்கையும் இன்னும் எடுக்கப்படவில்லை என அப் பெண், அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd