முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காப்பாளர் பதவியிலிருந்தும் நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என தகவல் தெரிவிக்கின்றது.
சந்திரிகாவை, கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கான யோசனை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும்.
மத்தியக் குழுக்கூட்டம் நாளை (05) நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாப ராஜபக்ஷவை ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், சந்திரிகா குமாரதுங்க, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரவளிப்பதற்கு தீர்மானித்து ஒப்பந்தமொன்றையும் கைச்சாத்திட்டள்ளார்.
ஆகையால், கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அவரை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை(5) நடைபெறும் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டம், சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் லக்ஷ்மன் பியதாஸவின் தலைமையிலேயே இடம்பெறும்.
இந்தக் கூட்டத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பங்கேற்கமாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.