ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் மேடைகளில் ஏறும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கு எதிராக “ஹு“ சத்தமிடுவதை சுதந்திரக் கட்சியின் மீண்டும் மீண்டும் வன்மையாக கண்டித்துள்ளனர்.
சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கு ஏற்படும் எதிர்ப்பு காரணமாக ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வாக்குகளின் எண்ணிக்கை குறைவடையும் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் ஊக்கமிழக்கும் நிலைக்கு தள்ளப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“இவ்வாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் ஹு சத்தமிடுவதால் அவை கோத்தாபய ராஜபக்ஷவின் கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கையில் பாதிப்பினை ஏற்படுத்தும்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் பிரதமர நீதியரசர் ஸ்ரீரானி பண்டாரநாயக்கவை பதவிநீக்கிய போது, சில தரப்பினர் நடந்துக்கொண்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.