web log free
June 06, 2026

எஸ்.பியின் MSD இருவர் கைது

கோத்தாவுக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்கவின் பாதுகாவலர்களான, அமைச்சரவை பாதுகாப்பு அதிகாரிகள் இருவர், பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கினிகத்தேனையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பிலேயே இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து, இரண்டு கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கினிகத்தேனையில் எஸ்.பி பயணித்த வாகனத்தை மறித்தவர்கள் மீதே, இவ்வாறு  நேற்றிரவு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் காயமடைந்த இருவரும் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd