படைப்புழுக்களினால் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் அநுராதபுரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி விவசாய பணிப்பாளரும், படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் பிரிவின் பிரதானியுமான அநுர விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
மொனராகலை, அம்பாறை, பதுளை, குருநாகல் மற்றும் அநுராதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் படைப்புழுக்களினால் அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கைகளுக்கான இழப்பீட்டை பெற்றுக் கொடுப்பதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்காக குறித்த பகுதிகளுக்குச் சென்று மதிப்பீடு செய்யப்படவுள்ளதுடன், ஏக்கர் ஒன்றுக்கு அதிகபட்ச இழப்பீடாக 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
எனினும், பாதிப்புகளின் தன்மையின் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகையில் மாற்றம் ஏற்படும் என படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் பிரிவின் பிரதானி குறிப்பிட்டுள்ளார்.