ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரின் யோசனைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
இராசாய உரத்தை இலவசமாக வழங்குவதாக முன்வைத்துள்ள யோசனைக்கு தான் இணங்கவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இராசாய உரப்பாவனை சிறுநீரக நோய் அதிகரிப்பதற்கு பிரதான காரணம் என, தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாய பொருளாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் விவசாயிகளுக்கு வசதிகளை செய்துகொடுத்தல் என்பது அரசியல் தலைவர்களின் பொறுப்பு என்றாலும், சுகாதார வளத்தை மக்களிடம் கட்டியெழுப்புவதில் பாதிப்பு ஏற்படும் தீர்மானங்களை ஒருபோதும் மேற்கொள்ளக்கூடாது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் இராசாய உரங்களுக்கு பதிலான இயற்கை பசளையை பயன்படுத்தும் வகையிலான கொள்கையை உருவாக்கி நாடு பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.