எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், கோத்தாபய ராஜபக்ஸவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவை தள்ளுபடி செய்யுமாறு கோரி, காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் தேநுவர ஆகியோரால் உயர் நீதிமன்றத்தில் விசேட மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் கடந்த 4 ஆம் திகதி குறித்த மனு நிராகரிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை தள்ளுபடி செய்து தாம் கோரியிருந்த கட்டளையை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட மேன்முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.