web log free
May 13, 2025

உண்ணாவிரதத்துக்கு தடை- மஹிந்த

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று (13) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. அதற்குப் பின்னர், எந்த காரணத்துக்காகவும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தமுடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

“அமைதி காலத்தில்” எந்தவொரு நபரும், உண்ணாவிரதம் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடமுடியாது என்றார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிலர், மாறி, மாறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அது ஏதாவது ஒரு வேட்பாளருக்கு பங்கத்தை ஏற்படுத்தக்கூடும், மற்றுமொருவருக்கு அதுவே வாய்ப்பாக அமைந்துவிடக் கூடும் என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd