web log free
March 23, 2026

பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்கு முதல்நாளான நாளை (13) சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைவாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் படையினர் தங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலேயே நாளை (13) பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

இதேவேளை, வாக்கெண்ணும் நிலையங்களாக செயற்படபோகும் பாடசாலைகள் யாவும் இன்றையதினம் மூடப்பட்டுவிட்டன என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd