web log free
March 24, 2026

கோத்தாவுக்கு மோடி வாழ்த்து

 இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தன்னுடைய டுவிற்றர் வலைத்தளத்திலேயே அவர், தனது பதிவை இட்டுள்ளார்.

“எங்கள் இரு நாடுகளுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்துவதற்கும்,

எங்கள் பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd