web log free
March 26, 2026

கோத்தாவுடன் ரணில் பேச முஸ்தீபு

புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் என்ற வகையில் அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி கோத்தாவுக்கு ஒத்துழைப்பு நல்குவதா? அல்லது அடுத்தக்கட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்குச் செல்வதா என்பது தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடப்படும் என அறியப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில்  இன்று (18) பிற்பகல் 2 மணியளவில், முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது. 

அந்தக் கூட்டத்திலேயே, இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது. 

Last modified on Tuesday, 19 November 2019 02:01
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd