பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்னும் 24 மணிநேரத்தில் தன்னுடைய பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.
அதன்பின்னர், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், தினேஸ் குணவர்தன, தற்காலிக பிரதமராக நியமிக்கப்படுவார்.
அதனையடுத்து, ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவுடன், பாராளுமன்றத்தை கலைக்கும் பிரேரணையொன்று எதிர்வரும் புதன்கிழமை கொண்டுவரப்படும். அந்தப் பிரேரணைக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஆதரவளிக்கும்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அப்பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும்.