web log free
February 04, 2026

25 பேர் மஹிந்தவுடன் இணைவர்?

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 25க்கும் 30க்கும் இடைப்பட்டவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள போதிலும், இறுதி முடிவெதுவும் எட்டப்படவில்லை. 

நாளை, புதன்கிழமை நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டம் மற்றும் ஆளும் கட்சி எம்.பிகளின் கூட்டங்களின் பின்னர் இறுதி முடிவை எட்டுவதற்கு இரு தரப்பினரும் தீர்மானித்துள்ளனர் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd