ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்றுவேன் என அறிவித்துவிட்டு இலண்டனிலிருந்து நாடு திரும்பிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் என அறியமுடிகின்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அணியொன்றை, இந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் உருவாக்கினார்.
அந்த அணியில், பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவும் அங்கம் வகித்தார். அவர், தனிமைப்படுத்தப்பட்டுவிட்டார்.
இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்த, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை மீண்டும் ஏற்றுக்கொண்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியக் கூட்டமொன்று நேற்று முன்தினம் (18) நடைபெற்றது. இதன்போதே, கட்சித் தலைவர் பதவியை மைத்திரிபால சிறிசேன மீளவும் பெற்றுக்கொண்டார்.