ஊடகவியலாளர் சந்திப்புக்கு அழைத்துவரப்பட்ட வெள்ளை வேன் சாரதியை கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தி, குற்றச்சாட்டப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (21) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்த, சகலரும் கைதுசெய்யப்படுவர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களும் கைதுசெய்யப்படுவர் என்றார்.
அதுமட்டுமன்றி, மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் குற்றமிழைத்தவர்கள் கைதுசெய்யப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்படுவர்.