இலங்கையின் நிறைவேற்றதிகாரமுடைய 7ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்படும் சகல நடவடிக்கைகளுக்கும் தனது முழு ஒத்துழைப்பை புதிய ஜனாதிபதிக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.