எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்.
இதனையடுத்த, இன்று பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் அவர் கடமைகளைக் பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக இன்று (21) பதவியேற்றார்.
இதனையடுத்து, அவரது செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.