கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் பதவி தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், சபாநாயகர் கருஜயசூரியவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இந்நிலையில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு, அவருக்கு சார்பான அணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 45 பேர் கையொப்பமிட்டு, சபாநாயருக்கு கடிதமொன்றை கையளித்துள்ளனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிக்கவேண்டும் என்பது தன்னுடைய வேலையல்ல என்றும், அது எதிர்க்கட்சியின் பொறுப்பாகுமென சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்து, கடிதமொன்றை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்.