ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி தோல்வியடைந்துள்ள நிலையில்,முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு வகையிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்ட, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் மீதும் தன்மீதும் முன்வைக்கப்பட்டுள்ள சகல குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
தான், வடக்கு, கிழக்கை மட்டுமே பொறுப்பெடுத்து, தேர்தல் பிரசாரத்தை முன்னெடுது்தேன். அதனூடாக வாக்களிப்பு சதவீதத்தை அதிகரிக்க முடிந்தது என்றார்.
என்றாலும், தெற்கில் வாக்குகள் குறைந்துவிட்டன. அதனால், தோல்வியை சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது என்றார்.
சில மாவட்டங்களில் மட்டும் நாங்கள் வெற்றிக்கொண்டாலும்,பொதுவாக பார்க்கும் போது, நாங்கள் தோவ்யடைந்துள்ளோம்.
குறிப்பாக, ஒருபுறம் எங்களிடம் ஜனநாயகங்கள் உள்ளன, ஒரு பெரிய வளர்ச்சி, ஒரு சட்டம் மற்றும் ஒழுங்கு வளர்ச்சி மற்றும் சமூக சேவைகள் நாங்கள் எதிர்பார்த்த பதிலைப் பெறவில்லை என்றார்.