web log free
December 15, 2025

பிரதிப் பொதுச் செயலாளராக ருவன் நியமனம்


இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜயவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கு, அக்கட்சியின் செயற்குழு ஏகமனதாக நேற்று (24) தீர்மானித்தது.

அதற்கப்பால், துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, கட்சியின் உள்ளகச் செயற்பாட்டு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பலமிக்கதோர் அமைப்பாக முகம் கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களை தயாரிப்பதற்கான பொறுப்பு கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிமுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வேலைத்திட்டம் கட்சியின் அதிகாரிகள் சபைக்கு முன்வைக்கப்பட்டதன் பின்னர், செயற்குழுவின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படும்.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், கட்சியின் தலைவர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd