தம்பியான ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விதித்திருந்த கட்டுப்பாடுகளை, அண்ணனான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறுகிய காலத்துக்குள் மீறிவிட்டார்.
ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட கோத்தாபய ராஜபக்ஷ, தான் பயணிக்கும் போது, வீதிகளை மூடவேண்டாம். தன்னுடைய வாகன தொடரணியில், இரண்டு வாகனங்கள் மட்டுமே பயணிக்கவேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
எனினும், ஜனாதிபதி அவ்வாறு பயணிக்கும் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வீதிகளை மூடி சுமார் 23 வாகனங்களை கொண்ட தொடரணியில், கண்டிக்கு சென்றிருந்தமை சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன.
படங்கள் மட்டுமன்றி, வீடியோக்களும் எடுத்து, சமூக ஊடகங்களில் பதவிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, ஜனாதிபதியான தம்பியின் அறிவுரையை, அண்ணனான பிரதமர் கடைப்பிடிக்க வில்லை என்ற வகையில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.