குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, சானி அபேசேகரவுடன் இணைந்து, விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா, நாட்டை விட்டு தப்பியோடிவிட்டார்.
மனித படுகொலை மற்றும் கூட்டு கொள்ளை விசாரணைப் பிரிவின் விசாரணை அதிகாரியாக அவர் பணியாற்றியிருந்தார்.
மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன், சுவிஸ்லாந்துக்கு அவர் தப்பியோடிவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பிற்பகல் 12.50க்கு,டப்ளியு கே. 0065 என்ற இலக்கத்தை கொண்ட விமானத்தில், நாட்டிலிருந்து அவர் சென்றுவிட்டாரென, பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பொலிஸ் அதிகாரி சானி அபேசேகரவுடன் இணைந்து, சுமார் 1 வருடம் சேவையாற்றியுள்ளார்.
11 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டமை, லசந்த விக்கிரமதுங்க வழக்கு, சேயா சந்தவமி படுகொலை வழக்கு, டீ.ஏ. ராஜபக்ஷ வழக்கு, யாழ்ப்பாணம் வித்திய படுகொலை, வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை ஆகிய குற்றவியல் வழக்குகளில் அதுவும் சிலவாகும்.
2018 நவம்பர் 18ஆம் திகதியன்று நீர்கொழும்புக்கு அவர் இடமாற்றம் வழக்கப்பட்டது. எனினும், அவருடைய இடமாற்றம் இரத்து செய்யப்பட்டது.
அவர், பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவிக்காமல், நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என, பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.