சபாநாயர் கருஜயசூரியவின் நிராகரிப்பினால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, அதிர்ச்சியடைந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி மறுசீரமைப்பின் போது, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும், அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கட்சியின் தலைமைத்துவத்தையும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்தவர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார் என அறியமுடிகின்றது.
அந்தக் கோரிக்கையை, சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ரணில் விக்கிரமசிங்க அதிர்ச்சியடைந்துள்ளார் என அறியமுடிகின்றது.