மாகாண சபைகள் முறைமையை ஒழிப்பதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பை கோரி, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில், ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.
தேரர்கள், ஏனைய மதத்தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளினால், இந்த ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மாகாண சபைகள் முறைமையை இல்லாதொழிக்கும் செயற்பாட்டுக்கு, இந்திய பிரதமர் ஒத்திழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் முறைமை, இந்தியாவினால் பலவந்தமான முறையில் எங்களுக்கு வழங்கப்பட்ட ஒன்றாகும். அந்த மாகாண சபைகள் யாவும், செயலிழந்து வௌ்ளை யானைகளாக தற்போது உள்ளது என்றும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இந்தியாவுக்கான விஜயத்தை நாளை வியாழக்கிழமை மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையிலேயே இவ்வாறான ஆவணமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.