யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்ப்பால் தோற்கடிக்கப்பட்டது.
யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (28) காலை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது.
அதன்போது, அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் சபையில் சமர்பிக்கப்பட்டதுடன், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாத்திரமே ஆதரவு வழங்கினார்கள்.
வரவு - செலவு திட்டத்துக்கு ஆதரவாக 16 பேர் வாக்களித்தனர்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 21 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
இறுதியில், மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
இதேநேரம், இன்றைய அமர்வுக்கு 7 உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.