ஸ்ரீ லங்கா பொலிஸில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவி இரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று (28) தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளராக தற்போது பதவிவகிக்கும் பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர, பொலிஸ் சட்டப்பிரிவில் பணிப்பாளராக நியமிக்கப்படவுள்ளார். அதற்கான தீர்மானத்தை பொலிஸ் ஆணைக்குழு எடுத்துள்ளது.
1970களில் ஸ்ரீ லங்கா பொலிஸில் மக்கள் தொடர்பாடல் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்னர், 1990 களில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவி உருவாக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு பொலிஸ் ஊடகப் பிரிவு, பொலிஸ் பிரிவாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. அன்றிருந்த பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.