மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக இருந்தபோது, பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட ரோயல்பார்க் கொலைவழக்கின் குற்றவாளியான, ஜூட் சமந்த, வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு, உயர்நீதிமன்றம், இடைக்கால தடையுத்தரவை இன்று (29) பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (29) இடம்பெறவுள்ளது.
இந்த மனு மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்கண்டவாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரோயல் பார்க் கொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். அதனையடுத்து, அந்த பொதுமன்னிப்பு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கொழும்பு-08, காசல் வீதியிலுள்ள பெண்கள் ஊடக ஒருங்கிணைப்பினால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், சட்டமா அதிபார், சிறைச்சாலைகள் ஆணையாளர், குடிவரவு-குடியகல்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட 10 பேர், பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.