மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
தொடர்ந்து பெய்துவரும் மழையால், கேகாலை, இரத்தினபுரி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு, மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மண்சரிவு முன்னெச்சரிக்கை காலப்பகுதியில் பின்வருவனவற்றில் கவனம் எடுக்கவும்
1. பின்வரும் மண்சரிவு முன் அறிகுறிகளையிட்டு கவனத்தை செலுத்தவும்.
➢ நிலத்தில் வெடிப்பு உருவாகுதல், ஆழமாகும் வெடிப்புகள் மற்றும் தரை உள்ளிறக்கங்கள்.
➢ மரங்கள்,மின் கம்பங்கள், வேலிகள், மற்றும் தொலைபேசிக் கம்பங்கள் சாய்வடைதல்.
➢ சாய்வுகளில் அமைந்துள்ள கட்டிடங்களின் தரை மற்றும் சுவர்களில் வெடிப்புகள் உருவாகுதல்.
➢ நிலத்திலிருந்து திடீரென நீரூற்றுகள், சேற்று நீர் தோன்றுதல் மற்றும் தற்போதுள்ள நீரூற்றுகள்
தடைப்படுதல் அல்லது இல்லாது போகுதல்.
2. மண்சரிவுக்கு முன்னரான அறிகுறிகளை கொண்ட இடங்களிலிருந்து உடனடியாக மக்கள் அப்பால் நகர
வேண்டும்.
3. மேலும், பாதிப்பு ஏதுநிலையுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மேலதிக விழிப்புடன் இருக்கவேண்டும்
என்பதுடன் கடும் மழை தொருமாயின் விரைவாக பாதுகாப்பான இடங்களுக்கு நகர ஆயத்தமாகவும்
இருக்கவேண்டும்.