web log free
January 11, 2026

O/L மாணவி மண்ணில் புதையுண்டு மரணம்

நுவரெலியா வலப்பனையிலுள்ள வீடொன்றின் மீது, மண்திட்டு விழுந்ததில், அவ்வீட்டிலிருந்த மூவர் மரணித்துள்ளனர்.

வலப்பனை - கண்டி வீதியிலுள்ள மூன்வத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீதே, நேற்று முன்தினம் (30) இவ்வாறு மண்திட்டு விழுந்துள்ளது..

சம்பவத்தில், கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன கருணாரத்ன (வயது 16) எனும் மாணவனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றனர்.

தாய், தந்தையுடன் மரணமடைந்த அந்த மாணவின், நாளை ஆரம்பமாகவிருக்கும் சாதாரண தரப்பரீட்சையில் தோற்றவிருந்தவர் என அறியமுடிகின்றது.

ஸ்தலத்துக்கு விரைந்த நுவரெலியா இராணுவ முகாமின் அதிகாரிகள், வலப்பனை பொலிஸார், பிரதேசவாசிகள் இணைந்து, அந்த மூன்று சடலங்களையும் மீட்டெடுக்கும் நடவடிக்கைள் முன்னெடுத்துள்ளனர் என நுவரெலியா பிரதேச ​சபையின் செயலாளர் புஷ்பகுமார தெரிவித்தார்.

அவ்விடத்தில் மண்சரிவு ஏற்படுவதற்கான, சாத்தியக்கூறுகள் இருப்பதனால், அவ்வீட்டி​லிருந்து வெளியேறி, பாதுகாப்பான இடத்தில் தங்கிக்கொள்ளுமாறு, அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால், ஏற்கெனவே, அறிவுறுத்தப்பட்டிருந்தது என்றும் அறியமுடிகின்றது.

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd