ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பை மீண்டும் மீறிவிட்டார் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
மூன்று மாதங்களுக்கு ஒருதடவை, பாராளுமன்றத்துக்கு ஜனாதிபதி வருகைதரவேண்டும். எனினும், கடந்த ஆகஸ்ட் மாதமே, ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதந்து சபையமர்வுகளில் பங்கேற்றிருந்தார்.
அதற்குப் பின்னர் சபை கூடி, அமர்வுகள் நடைபெற்றுள்ளன. எனினும், ஜனாதிபதி வருகைதரவில்லை. இது அரசியலமைப்பை மீறும் செயலாகும். இதுதொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவுறுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.