பாராளுமன்றத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ள என தெரிவித்து படைகல சேவிதர், செங்கோல் வைக்கப்படும் போது, அதனை தலைப்பகுதி பக்கத்தில் ஆளும் கட்சியினரும், பிடிப்பக்கத்தில், எதிர்க்கட்சியினரும் அமருவர்.
பிரதமர் உள்ளிட்ட ஆளும் தரப்புக்கு, தலைப்பகுதி பக்கத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிரேஷடத்துவ அடிப்படையிலேயே ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி, ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்கும் முன்வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எதிரணியைச் சேர்ந்த 12 பேருக்கு, ஆளும் தரப்பின் பின்வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறிக்கு ஆளும்தரப்பில் இரண்டாவது வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்
அவருக்கான ஆசனத்தை, எதிரணியின் பக்கமாக ஒதுக்கிதருமாறு கோரப்பட்டால் மட்டுமே, எதிரணியின் பக்கத்தில் ஆசனம் ஒதுக்கப்படும் என படைகல சேவிதர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் பதவிக்குரிய பெயர் இதுவரையிலும் பரிந்துரைக்கவில்லை. அப்படி பரிந்துரைத்தால் மட்டுமே, எதிரணியில் ஆசனங்களை ஒதுக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.