பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கூட்டொப்பந்தம் தொடர்பிலான இன்றைய பேச்சுவார்த்தையில் இருதரப்பினருக்கும் இடையில் ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்கவேண்டும் என பல்வேறு மட்டங்களிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டன எனினும், அடிப்படைச் சம்பளத்தை 700 ரூபாவாக அதிகரிப்பதற்கே இணக்கம் காணப்பட்டது.
வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம், இதர கொடுப்பனவுகளையும் சேர்த்து, நாளொன்றுக்கு 895 ரூபாவை மட்டுமே தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.
இது தொடர்பிலான ஒப்பந்தம் எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது என்றும் அறியமுடிகின்றது.
அடிப்படைச் சம்பளம்- ரூபாய் 700
விலைக்கான கொடுப்பனவு- ரூபாய் 50
மேலதிக கொழுந்து - ரூபாய் 40
EPF மற்றும் ETF - ரூபாய் 105
மொத்தம் ரூபாய் 895 ஆகும்