கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதுவராலயத்துக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த, ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன, உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டு, கடையொன்றில் கொத்துரொட்டி சாப்பிடும் படம் வைரலாகியுள்ளது.
சுவிஸ் தூதுவராலயத்தில் பணியாற்றும் பெண் பணியாளரை கடத்திச்சென்று, தாக்குதல் நடத்தி, கைவிட்டுச் சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட யுவதி, பொலிஸில் முறைப்பாடு செய்யவேண்டும் என வலியுறுத்தியே அவர், உண்ணாவிரத்தத்தை மேற்கொண்டார்.
எப்படியாயினும், பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், முன்னாள் எம்.பியான சரத் வீரசேகர ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைய உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் கைவிட்டார்.
உண்ணாவிரதத்தை கைவிட்ட அவர், பத்தரமுல்லைக்கு சென்று, அங்குள்ள கடையொன்றில் கொத்துரொட்டி சாப்பிட்டார்.