web log free
February 08, 2026

அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கிவிடுங்கள்

நீதிமன்றத்தை அவமதித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பளித்து விடுவிக்குமாறு பௌத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரமவும் கோரியுள்ளார்.

இதுதொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர், கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

பௌத்த மகா சங்கத்தினர், தலதா மாளிகையின் தியவடன நிலமே மற்றும் ஹிந்து சம்மேளனத்தின் தலைவர் தாரா டி அருக்கண்ணன் ஆகியோரும் மேற்படி பொதுமன்னிப்பு விவகாரம் தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் அக்கடிதத்தில் அமைச்சர் காமினி சுட்டிக்காட்டிள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd