web log free
November 28, 2024

நைஜீரிய பிரஜைகளால் அச்சுறுத்தல்

 மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நைஜீரிய பிரஜைகளை அரச செலவில், அவர்களது நாட்டுக்கு அனுப்பிவைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு - குடியகழ்வு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு  விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டு, தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். 

இதற்கான அனுமதி தொடர்பில் இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு, அதிக நிதிஒதுக்கீடு காரணமாக அனுமதி கிடைக்கப்பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எவ்வாறாயினும், தடுத்து வைக்கப்பட்டுள்ள நைஜீரிய பிரஜைகள் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், அவர்களில் அதிகளவானவர்கள் நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மிரிஹான தடுப்பு முகாமில் இருந்த 111 நைஜீரிய பிரஜைகளில் 09 பேர் கடந்த 05ஆம் திகதியாகும் போது தப்பிச்சென்றுள்ளனர் என கூறப்படுகின்றது.

தப்பிச்சென்றவர்கள் தொடர்பில் பொலிஸ், புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd