புலனாய்வு நடவடிக்கைகளை பலப்படுத்துவதன் ஊடாக மட்டுமே, இஸ்லாம் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
புலி பயங்கரவாதிகளுக்கு எதிராக தரை, கடல், வானத்தின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தாலும், புதிய பயங்கரவாத்தை ஒழிப்பதற்கு புலனாய்வு நடவடிக்கைகள் அத்தியாவசியமானதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இஸ்லாம் பயங்கரவாதத்தை நிறுத்தாமை இலங்கைக்கு மட்டுமன்றி வலய நாடுகளுக்கும் அச்சுறுத்தராகும். பக்கத்தில் இருக்கும் நாடுகள் அதன் அச்சுறுத்தலை நன்கு உணர்ந்துள்ளனர் என்பதனால், அந்த நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது அத்தியாவசியமாகும் என்றார்.
கொழும்பு தாமரை தடாகத்தின் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியில் 13ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.