web log free
June 24, 2026

மைத்திரி எம்.பி ஆவது உறுதியானது

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

அது உறுதியாகிவிட்டது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

கட்சியின் ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டில், அவருடைய எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது.

அந்த வெற்றிடத்துக்கே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நியமிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd