கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளானதாக போலியான தகவல்களை முன்வைத்தாரென குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட இலங்கைக்கான சுவிஸ் தூதரக பணியாளர் கானியா பெனிஸ்ரர் பிரான்சிஸ் ,டிசம்பர் 30 ஆம் திகதி வரை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
முன்னதாக கடத்தப்பட்டதாக சொல்லப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் கானியா பெனிஸ்ரர் பிரான்சிஸை சி ஐ டியினர் கைது செய்தனர். அவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை அறிவுறுத்தியிருந்தார் .
போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசை இக்கட்டான நிலைக்கு தள்ளியமை காரணமாக அவர் கைது செய்யப்பட்ட வேண்டுமென சட்ட மா அதிபர் அறிவுறுத்தியிருந்தார்.
இதேவேளை இன்று காலை அவர் மனநல பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டார்.இந்த பின்னணியில் அவரை சந்தேகநபராக பெயரிட்டு கைதுசெய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.