மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும். அதற்கான, தற்போதைய பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் கலைக்கப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகையில், ஊடகங்களின் பிரதானிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தான் செயல்படுவதற்கு பலமிக்க அரசாங்கமொன்று அவசியம். அதனை தற்போதிருக்கும் பாராளுமன்றத்தினால் செய்யமுடியாது என்றார்.
ஒத்திவைக்கப்பட்டிருக்கும் சகல தேர்தல்களையும் நடத்துவதே, தன்னுடையதும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் அபிலாசைகளாகும் என்றும் ஜனாதிபதி கோத்தாபய தெரிவித்தார்.
பொராளுமனறத் தேர்தலில், எந்த சின்னத்தில் போட்டியிடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த விடயம் கலந்துரையாடப்பட்டு தீர்மானிக்கப்படும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் நடவடிக்கைளை முன்னெடுப்பார். பசில் ராஜபக்ஷ அதற்கான பொறிமுறையை தயாரிப்பார். நான், ஆதரவளிப்பேன் என்றார்.